செய்திகள்
வங்காளதேச பிரிமீயர் லீக்: லின், சர்பிராஸ் அகமதுடன் குல்னா டைட்டன்ஸ் ஒப்பந்தம்
வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் வங்காளதேச பிரிமீயர் லீக் தொடரில் ஆஸ்திரேலியாவின் லின், பாகிஸ்தானின் சர்பிராஸ் அஹமது விளையாடுகிறார்கள்.
ஐ.பி.எல்., பிக் பாஷ், கரிபீயன் பிரிமீயர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடைபெறுவதுபோல் வங்காள தேசத்தில் வங்காளதேச பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இடம்பிடித்துள்ள குல்னா டைட்டன்ஸ் அணி ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரரான கிறிஸ் லைன்-ஐ ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய கிறிஸ் லைன் அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஐ.பி.எல். தொடரில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 180.98 ஆகும்.
அவருடன், சீக்குகே பிரசன்னா என்ற இலங்கை வீரரையும், தென்ஆப்பிரிக்காவின் வேகப்பநது வீச்சாளர் கைல் அபோட், பாகிஸ்தானின் ஷதாப் கான், தென்ஆப்பிரிக்காவின் ரிலே ரோசவ் ஆகியோரையும் ஒப்பந்தம் செய்துள்ளது குல்னா டைட்டன்ஸ்.
அதுபோக, பாகிஸ்தான் அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடரை வாங்கிக்கொடுத்த அந்த அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமதுவும் குல்னா டைட்டன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் லென்டில் சிம்மன்ஸ் ராஜ்ஷாஹி கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். இவர் 2015-ம் ஆண்டு நடைபெற்ற பிபிஎல் தொடரில் 221 ரன்கள் எடுத்திருந்தார்.