செய்திகள்

பிஃபா கான்பிடரேசன் கால்பந்து: போர்ச்சுக்கல் - மெக்சிகோ ஆட்டம் டிரா

Published On 2017-06-19 12:35 GMT   |   Update On 2017-06-19 12:35 GMT
பிஃபா கான்பிடரேசன் கால்பந்து தொடரில் போர்ச்சுக்கல் - மெக்சிகோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.
ரஷியாவில் கான்பிடரேசன் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள போர்ச்சுக்கல் - மெக்சிகோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணியின் குரேஷ்மா முதல் கோலை பதில் செய்தார். இதற்கு பதிலடியாக மெக்சிகோ அணியின் ஹெர்னாண்டஸ் 42-வது நிமிடத்தில் பதில்கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன.



2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 85-வது நிமிடம் வரை இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 86-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணியின் செட்ரிக் ஒரு கோல் அடிக்க போர்ச்சுக்கல் 2-1 என முன்னிலையில் இருந்தது.

90 நிமிடம் வரை மெக்சிகோ கோல் அடிக்கவில்லை. காயம் மற்றும் ஓய்விற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் 91-வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் மொரேனோ ஒரு கோல் அடிக்க ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.
Tags:    

Similar News