செய்திகள்

மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ்: செபஸ்டியான் வெட்டல் சாம்பியன் பட்டம் வென்றார்

Published On 2017-05-28 16:22 GMT   |   Update On 2017-05-28 16:22 GMT
பார்முலா-1 கார் பந்தயத்தின் மொனாகோ கிராண்ட் பிரிக்ஸில் பெராரி அணி வீரர் செபஸ்டியான் வெட்டல் சாம்பியன் பட்டம் வென்றார்.
பார்முலா-1 கார் பந்தயம் பல்வேறு கிராண்ட் பிரிக்ஸாக நடைபெறும். இன்று மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ் நடைபெற்றது.

இதில் பெராரி அணி வீரர் செபஸ்டியான் வெட்டல் முதல் இடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். இதே கம்பெனியின் மற்றொரு வீரரான கிமி ரெய்க்கோனென் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.



இந்த வெற்றியின் மூலம் செபஸ்டியான் வெட்டல் லெவிஸ் ஹாமில்டனை விட 25 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளார்.

இதற்கு முன் பெராரி அணி சார்பில் மைக்கேல் சூமாக்கர் 2001-ம் ஆண்டு மொனாகோ கிராண்ட் பிரிக்ஸில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். அதற்குப் பிறகு பெராரி அணி சார்பில் வெட்டல் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மொனாகோ கிராண்ட் பிரிக்ஸை வென்றுள்ளார்.
Tags:    

Similar News