செய்திகள்

ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணிக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா?

Published On 2017-05-13 09:21 IST   |   Update On 2017-05-13 09:21:00 IST
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் 4 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்றுள்ள மும்பை அணியுடன், 5 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ள கொல்கத்தா அணி மோதுகிறது.
மும்பை அணி 13 ஆட்டத்தில் ஆடி 9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் அடுத்த சுற்று வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்து விட்டது. மும்பை அணி கடைசி 2 லீக் ஆட்டங்களில் முறையே 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்திடமும், 7 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடமும் தோல்வி கண்டது.

கொல்கத்தா அணி 13 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 5 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளது. கொல்கத்தா அணி தனது கடைசி 4 லீக் ஆட்டங்களில் 3-ல் தோல்வியை சந்தித்துள்ளது. லீக் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேற இரண்டு வாய்ப்பு கிடைக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும்.



கொல்கத்தா அணிக்கு எதிராக மும்பை அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த ஆண்டு அந்த அணிக்கு எதிராக மும்பை அணி 2 ஆட்டத்திலும் வெற்றி கண்டது. இந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

அந்த தோல்விக்கு சொந்த மண்ணில் பதிலடி கொடுக்க கொல்கத்தா அணி முயற்சிக்கும். இரு அணியிலும் அதிரடி ஆட்டக்காரர்கள் அதிகம் இடம் பெற்று இருப்பதால் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Similar News