செய்திகள்

பெண்கள் கிரிக்கெட்: இந்திய வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி 181 விக்கெட்டுக்கள் வீழ்த்தி உலக சாதனை

Published On 2017-05-09 18:58 IST   |   Update On 2017-05-09 18:58:00 IST
பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டியில் 181 விக்கெட்டுக்கள் வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனை என்ற பெருமையை இந்திய வீராங்கனை ஜுலன் கோஸ்வானி பெற்றுள்ளார்.
தென்ஆப்பிரிக்காவில் நான்கு மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி 7.3 ஓவரில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இதன்மூலம் ஒருநாள் போட்டியில் 181 ரன்கள் வீழ்த்தி, அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனையைப் பெற்றுள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வீராங்கனை கேத்ரின் 180 விக்கெட்டுக்கள் வீ்ழ்த்தியதுதான் சாதனையாக இருந்தது.

2002-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமான கோஸ்வாமி இதுவரை 153 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் நீது டேவிட் 141 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 4-வது இடத்தில் உள்ளார்.

Similar News