செய்திகள்

ஐ.பி.எல். கிரிக்கெட்: ஒரே நாளில் பல சாதனை படைத்த கம்பீர்

Published On 2017-04-29 04:41 GMT   |   Update On 2017-04-29 04:41 GMT
கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர் நேற்றைய டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 71 ரன்கள் சேகரித்ததுடன் பல சாதனைகளையும் படைத்தார். இது குறித்த செய்தியை பார்க்கலாம்.
கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர் நேற்றைய டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 71 ரன்கள் சேகரித்ததுடன் பல சாதனைகளையும் படைத்தார். ஐ.பி.எல். போட்டியில் 4 ஆயிரம் ரன்களை (141 ஆட்டத்தில் 4,010 ரன்) கடந்த 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். குஜராத் கேப்டன் சுரேஷ் ரெய்னா (4,407 ரன்), பெங்களூரு கேப்டன் விராட் கோலி (4,274 ரன்) முதல் இரு இடங்களில் உள்ளனர்.

எல்லாவகையான 20 ஓவர் கிரிக்கெட்டையும் சேர்த்து 6 ஆயிரம் ரன்கள் மைல்கல்லை எட்டிய 13-வது வீரர், இந்திய அளவில் 4-வது வீரர் என்ற சிறப்புக்கும் கம்பீர் சொந்தக்காரர் ஆனார். 20 ஓவர் கிரிக்கெட்டில் கம்பீர் 229 ஆட்டங்களில் விளையாடி 6,023 ரன்கள் குவித்துள்ளார். ரெய்னா, கோலி, ரோகித் சர்மா ஏற்கனவே 6 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.



ஐ.பி.எல்.-ல் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்தவர் (3,311 ரன்) என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். இந்த வரிசையில் டோனி (3,270 ரன்) 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்த ஆட்டத்தில் கம்பீரும், உத்தப்பாவும் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் திரட்டினர். இதன் மூலம் இலக்கை துரத்திப்பிடிக்கையில் (சேசிங்) அதிக செஞ்சுரி பார்ட்னர்ஷிப் (4-வது முறை) கொடுத்த ஜோடி என்ற மகிமையும் இவர்களுக்கு கிடைத்தது.
Tags:    

Similar News