செய்திகள்

ஐ.பி.எல்.லில் 100 விக்கெட் வீழ்த்திய ஆசிஷ் நெக்ரா

Published On 2017-04-06 12:09 IST   |   Update On 2017-04-06 12:09:00 IST
10-வது ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வரும் 37 வயதான ஆசிஸ் நெக்ரா, பெங்களூர் அணிக்கு எதிராக 2 விக்கெட் எடுத்ததன் மூலம் ஐ.பி.எல்.லில் 100 விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஆசிஷ் நெக்ரா. ஐ.பி.எல். போட்டிகளில் அவர் மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளில் விளையாடி இருக்கிறார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக கடந்த ஆண்டில் இருந்து விளையாடி வருகிறார்.

37 வயதிலும் ஆசிஷ் நெக்ரா மிகவும் நேர்த்தியாக பந்துவீசி வருகிறார். பெங்களூர் அணிக்கு எதிராக அவர் நேற்று தொடர்ச்சியாக 2 விக்கெட்டை (வாட்சன், அரவிந்த்) கைப்பற்றினார். இதன்மூலம் ஆசிஷ் நெக்ரா ஐ.பி.எல்.லில் 100 விக்கெட்டை வீழ்த்தினார்.

83 இன்னிங்சில் 300.5 ஓவர்கள் வீசி 2340 ரன் கொடுத்து 100 விக்கெட்டை தொட்டார். சராசரி 23.40 ஆகும். 10 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்துவீச்சாகும். 100 விக்கெட் எடுத்த 8-வது வீரர் நெக்ரா ஆவார்.

ஐ.பி.எல்.லில் 100 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றிய பவுலர்கள் விவரம்:-


Similar News