செய்திகள்
இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: வங்காள தேச அணியில் புதுமுக ஆல்ரவுண்டர் சேர்ப்பு
இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான வங்காள தேச அணியில் புதுமுக ஆல்ரவுண்டர் மொகமது சாய்புதின் சேர்க்கப்பட்டுள்ளார்.
வங்காள தேச அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளைாடி வருகிறது. இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்கள் முடிந்துள்ள நிலையில், இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி 4-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 6-ந்தேதி நடக்கிறது.
இந்த தொடருக்கான வங்காள தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 வயதான வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மொகமது சாய்புதின் இடம்பிடித்துள்ளார்.
‘‘நாங்கள் வேகப்பந்து வீச்சுடன், பேட்டிங் செய்யக்கூடிய ஆல்ரவுண்டரை நீண்ட காலமாக தேடிவந்தோம். குறிப்பாக டி20 கிரிக்கெட் போட்டியில் அப்படிபட்ட ஆல்ரவுண்டர் பணி முக்கியமானது. மொகமது சாய்புதின் அந்த பணியை சிறப்பாக செய்வார்’’ என்று தலைமை தேர்வாளர் கூறியுள்ளார்.
இலங்கை தொடருக்கான வங்காள தேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. மோர்தசா (கேப்டன்), 2. சாஹிப் அல் ஹசன், 3. தமீம் இக்பால், 4. இம்ருல் கெய்ஸ், 5. சவுமியாக சர்கர், 6. முஷ்பிகுர் ரஹிம், 7. சபீர் ரஹ்மான், 8. மொகமது மெஹ்முதுல்லா, 9. மொசாடாக் ஹொசைன், 10. முஷ்டாபிஜூர் ரஹ்மான், 11. மெஹதி ஹாசன், 12. தஸ்கின் அகமது, 13. சுபாஷிஸ் ராய், 14. சஞ்ஜாமுல் இஸ்லாம், 15. நுருல் ஹாசன், 16. மொகமது சாய்புதின்.
மொகமது சாய்புதின் உடன் சஞ்ஜாமுல் இஸ்லாம், சபாஷிஸ் ராய், மெஹதி ஹாசன் ஆகியோரும் இன்றும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகவில்லை.