செய்திகள்

எங்களது இதயம், நினைவு எல்லாம் ஏற்கனவே ஆஸி. தொடர் மீதுதான்: விராட் கோலி

Published On 2017-02-13 20:04 IST   |   Update On 2017-02-13 20:04:00 IST
எங்களுடைய இதயம் மற்றும் நினைப்பெல்லாம் ஏற்கனவே ஆஸ்திரேலியா தொடர் குறித்துதான் இருக்கிறது என்று விராட் கோலி கூறியுள்ளார்.
வங்காள தேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா 208 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரட்டை சதம் அடித்த விராட் கோலி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

ஆட்ட நாயகன் விருது பெற்ற விராட் கோலி வரவிருக்கும் ஆஸ்திரேலியா தொடர் குறித்து கூறுகையில் ‘‘இந்த சீசனில் (2016-17) இங்கிலாந்து தொடர்தான் எங்களுக்கு சிறந்த தொடர் என்று நினைத்தேன். ஆனால் 4-0 என நாங்கள் வெற்றி பெற்றோம். இதேபோல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக செயல்பட விரும்புகிறோம். இதனை நோக்கிதான் ஒவ்வொரு வீரருடைய மனதிலும், இதயத்திலும் ஏற்கனவே இதுதான் இருக்கிறது’’ என்றார்.

வங்காள தேசம் அணிகளுக்கு எதிரான விளையாடிய ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு உதவியாக இருந்தது. இதனால் ரன்கள் அதிகரித்தது. முதல் இன்னிங்சில் வங்காள தேசம் நன்றாக பேட்டிங் செய்தது. பெரிய தொடருக்கு முன் சிறப்பான தி்ட்டத்தோடு செல்வது நல்ல பழக்கமாக இருக்கும். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடினார்கள். எல்லா விகிதத்திலும் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது’’ என்றார்.

Similar News