செய்திகள்

பாகிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டனாக சர்பிராஸ் அஹமது தேர்வுக்கு இன்சமாம் உல் ஹக் ஆதரவு

Published On 2017-02-10 11:24 GMT   |   Update On 2017-02-10 11:24 GMT
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சர்பிராஸ் அஹமதை நியமித்ததற்கு இன்சமாம் உல் ஹக் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் அசார் அலி. சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் 1-4 என இழந்தது.

இதனால் அசார் அலி மீது விமர்சனம் எழுந்தது. இதனால் அசார் அலி தனது ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல் டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்தார்.

இதனால் அசார் அலிக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் சர்பிராஸ் அஹமதை ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்தது. இதற்கு பாகிஸ்தான் அணியின் தலைமை தேர்வாளர் இன்சமாம் உல் ஹக் ஆதரவு தெரிவித்துள்ளார்.

“பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்பிராஸ் அஹமதை ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமித்ததற்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன்’’ என்று அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக சர்பிராஸ் அஹமது உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மிஸ்பா உல் ஹக்கை கேப்டன் பதவியில் நீடிக்க இன்சமாம் உல் ஹக்கிற்கு விருப்பம் இல்லை. இதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமும், பயிற்சியாளர் மிக்கே ஆர்தரிடமும் தெரிவித்துள்ளார். இதனால் யூனிஸ்கான் கேப்டனாகவும், சர்பிராஸ் அஹமது துணை கேப்டனாகவும் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Similar News