செய்திகள்
ரஞ்சி டிராபி: வலுவான மும்பையை வீழ்த்தி குஜராத் வரலாற்று சாதனை படைக்குமா?
2016-17 சீசன் ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் வலுவான மும்பையை வீழ்த்தி குஜராத் வரலாற்று சாதனை படைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2016-17 ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந்தேதி தொடங்கியது. லீக் ஆட்டங்கள், காலிறுதிகள், அரையிறுதிகளைக் கடந்து குஜராத், மும்பை அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இந்த ஆட்டம் நாளை மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் தொடங்குகிறது. இந்தியாவின் பெருமைக்குரிய உள்ளூர் டிராபியான ரஞ்சி தொடரை 66 வருட வரலாற்றில் குஜராத் அணி கைப்பற்றியதில்லை. சொல்லப்போனால் தற்போதுதான் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதனால் 66 வருட கனவை நனவாக்க குஜாராத் விரும்புகிறது. குஜராத் அணி அரையிறுதியில் ஜார்க்கண்ட் அணியை வீழ்த்தியது. குஜாராத் அணியில் ஆர்.பி.சிங் மற்றம் பும்ப்ரா ஆகிய இரு வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். பும்ப்ரா தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் குஜராத் அணியில் அவர் இடம்பெற மாட்டார். இது குஜராத் அணிக்கு பின்னடைவாக இருக்கும்.
ஆனால் பேட்டிங்கில் பிரியங் கிரித் பன்சால், சமித் கோஹெல் ஆகியொர் நல்ல நிலைமையில் உள்ளனர். பன்சால் முச்சதம் உள்பட இந்த தொடரில் 1270 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 97.69 ஆகும். கோஹெல் ஒரு இன்னிங்சில் 359 ரன்கள் உள்பட இத்தொடரில் 900 ரன்களை எட்டியுள்ளார். சராசரி 68.38 ஆகும். இந்த இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் குஜராத் அணி சரித்திர சாதனை படைக்க வாய்ப்புள்ளது.
மும்பையை பொறுத்தவரை அந்த அணி 41 முறை ரஞ்சி கோப்பையை கைப்பற்றியுள்ளது. தற்போது நடப்பு சாம்பியனாக அந்த அணிதான் உள்ளது. இதனால் மும்பையை எளிதில் குஜராத் அணியால் வீழ்த்திவிட முடியாது.
ஆனால் கடந்த சீசனில் விஜய் ஹசாரே தொடரையும், 2012-13 சையத் முஸ்டாக் அலி தொடரையும் கைப்பற்றி முத்திரை பதித்துள்ளது குஜராத் அணி. இந்த நம்பிக்கையுடன் நாளை மும்பையை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றுவிட்டால் குஜராத் அணி முதன்முறையாக ரஞ்சி டிராபி கோப்பையை கைப்பற்றி சாதனைப் படைக்கும்.