செய்திகள்

டெஸ்டில் 2-வது அதிவேக அரை சதம்: வார்னர் சாதனை

Published On 2017-01-06 06:34 GMT   |   Update On 2017-01-06 06:34 GMT
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 23 பந்தில் அரை சதம் அடித்தார். இதன் மூலம் டெஸ்டில் 2-வது அதிவேக அரை சதம் அடித்து வார்னர் சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் 78 பந்தில் சதம் அடித்தார். 2-வது இன்னிங்சிலும் அவர் அதிரடி காட்டினார்.

பாகிஸ்தான் பந்து வீச்சை அடித்து நொறுங்கிய வார்னர் 23 பந்தில் அரை சதம் அடித்தார். இதில் 7 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும். இதன் மூலம் டெஸ்டில் 2-வது அதிவேக அரை சதம் அடித்து வார்னர் சாதனை படைத்தார்.

இதற்கு முன்பு தென்ஆப்பிரிக்க வீரர் காலிஸ் 24 பந்தில் அரை சதம் அடித்து 2-வது இடத்தில் (ஜிம்பாப்வேவுக்கு எதிராக, 2005-ம் ஆண்டு) இருந்தார். அதை வார்னர் முறியடித்தார்.

முதல் இடத்தில் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா- உல்- ஹக் உள்ளார். அவர் 21 பந்தில் அரை சதம் (ஆஸ்திரேலியாவுக்கு எதராக, 2015) அடித்தார்.

Similar News