செய்திகள்

199 ரன்களில் ஆட்டம் இழந்த வீரர்கள் விவரம்

Published On 2016-12-19 03:18 GMT   |   Update On 2016-12-19 03:18 GMT
139 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 199 ரன்களில் ஆட்டம் இழந்த சில முக்கியமான வீரர்களை பற்றி கீழே விரிவாக பார்க்கலாம்.
* கர்நாடகாவைச் சேர்ந்த 24 வயதான லோகேஷ் ராகுல் இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்டில் 199 ரன்களில் கேட்ச் ஆனார். இது, டெஸ்டில் அவரது அதிகபட்ச ஸ்கோராகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 199 ரன்களில் ஆட்டம் இழந்த 2-வது இந்தியர் லோகேஷ் ஆவார். ஏற்கனவே முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் 30 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு எதிரான டெஸ்டில் ஒரு ரன்னில் இரட்டை சதத்தை நழுவ விட்டிருக்கிறார். அது தான் அசாருதீனின் அதிகபட்ச ஸ்கோராக நீடிக்கிறது.

* லோகேஷ் ராகுல் 200 ரன்கள் எடுத்திருந்தால் இங்கிலாந்துக்கு எதிராக இரட்டை சதம் எடுத்த 8-வது இந்தியர், அந்த அணிக்கு எதிராக 200 ரன்களை கடந்த 2-வது இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஆகிய சிறப்பை பெற்றிருப்பார். இது போன்ற சாதனைகள் எல்லாம் மயிரிழையில் நழுவிப்போய் விட்டன. இங்கிலாந்துக்கு எதிராக இரட்டை சதம் அடித்த ஒரே இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுனில் கவாஸ்கர் (1979-ம் ஆண்டு 221 ரன்கள்) ஆவார்.

* லோகேஷ் ராகுல் குவித்த 199 ரன்கள், சென்னை சேப்பாக்கத்தில் ஒரு வீரரின் 9-வது அதிகபட்சமாகும்.

139 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 9 வீரர்கள் 199 ரன்களில் ஆட்டம் இழந்துள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-

வீரர் நாடு எதிரணி ஆண்டு

லோகேஷ் ராகுல் இந்தியா இங்கிலாந்து 2016

ஸ்டீவன் சுமித் ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் 2015

இயான் பெல் இங்கிலாந்து தென்ஆப்பிரிக்கா 2008

யூனிஸ்கான் பாகிஸ்தான் இந்தியா 2006

ஸ்டீவ் வாக் ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் 1999

ஜெயசூர்யா இலங்கை இந்தியா 1997

மேத்யூ எலியாட் ஆஸ்திரேலியா இங்கிலாந்து 1997

அசாருதீன் இந்தியா இலங்கை 1986

முடாசர் நாசர் பாகிஸ்தான் இந்தியா 1984

Similar News