செய்திகள்

இங்கிலீஷ் பிரிமீயர் லீக்: செல்சியா தொடர்ந்து 9-வது வெற்றிகள் மூலம் முதலிடம்

Published On 2016-12-11 20:54 IST   |   Update On 2016-12-11 20:54:00 IST
இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் செல்சியா அணி தொடர்ந்து 9-வது வெற்றியை பெற்று பதக்க பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது.

இன்று முன்னணி கிளப் அணியான செல்சியா வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியோன் அணியை எதிர்கொண்டது. இதில் 1-0 என செல்சியா வெற்றி பெற்றது. அந்த அணியின் டியகோ கோஸ்டா 76-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால் செல்சியா 1-0 என வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் தொடர்ச்சியாக 9-வது வெற்றியை பெற்றுள்ளது. இதுவரை 15 போட்டிகளில் விளையாடி 37 புள்ளிகளுடன் செல்சியா முதல் இடத்தில் உள்ளது. அர்செனல் 15 போட்டிகள் முடிவில் 34 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. லிவர்பூல் 3-வது இடத்திலும், மான்செஸ்டர் சிட்டி 4-வது இடத்திலும், மான்செஸ்டர் யுனைடெட் 6-வது இடத்திலும் உள்ளது.

Similar News