செய்திகள்

பார்முலா 1 சாம்பியன் ரோஸ்பெர்க் அதிரடி ஓய்வு அறிவிப்பு

Published On 2016-12-02 15:16 GMT   |   Update On 2016-12-02 15:16 GMT
இந்த வருடத்திற்கான பார்முலா 1 கார்பந்தயத்தில் ஜெர்மனி வீரர் ரோஸ்பெர்க் சாம்பியன் பட்டம் வென்றார். அவர் இன்று திடீரென தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
ஜெர்மனி நாட்டின் முன்னணி கார் பந்தய வீரர் நிகோ ரோஸ்பெர்க். இவர் இந்த வருடத்திற்கான பார்முலா ஒன் கார் பந்தயத்தில் மெர்சிடெஸ் பென்ஸ் அணிக்காக பங்கேற்றார். இதே அணியில் லெவிஸ் ஹாமில்டனும் இடம்பிடித்திருந்தார்.

இருவருக்கும் இடையில் சாம்பியன் பட்டத்தை வெல்வதில் கடும் போட்டி நிலவியது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கடைசியாக நடைபெற்ற அபுதாபி கிராண்ட் பிரிக்ஸில் 2-வது இடம்பிடித்தார் ரோஸ்பெர்க். லெவிஸ் முதல் இடம் பிடித்தாலும், ஒட்டுமொத்தமாக 5 புள்ளிகள் முன்னிலைப் பெற்று சாம்பியன் ஆனார் ரோஸ்பெர்க்.

இந்நிலையில் 31 வயதாகும் ரோஸ்பெர்க் தான் ஓய்வு பெறுவதாக இன்று திடீரென அறிவித்துள்ளார். இதனை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ள அவர், ‘‘என்னுடைய லட்சிய மலையில் ஏறி உச்சத்தை தொட்டுவிட்டேன். ஆகவே, இந்த முடிவு சரியானது என உணர்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News