செய்திகள்

சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் மைனெனிக்கு வைல்டு கார்டு

Published On 2016-11-28 09:41 IST   |   Update On 2016-11-28 09:41:00 IST
அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சகெத் மைனெனிக்கும் பிரதான சுற்றில் நேரடியாக பங்கேற்க வசதியாக வைல்டு கார்டு சலுகை நேற்று அளிக்கப்பட்டது.
சென்னை :

சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அடுத்த ஆண்டு (2017) ஜனவரி 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடக்கிறது. ஏற்கனவே தமிழக வீரர் ராம்குமாருக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்திய வீரர் சகெத் மைனெனிக்கும் பிரதான சுற்றில் நேரடியாக பங்கேற்க வசதியாக வைல்டு கார்டு சலுகை நேற்று அளிக்கப்பட்டது. நார்வே வீரர் கேஸ்பர் ரூட்டும் வைல்டு கார்டு பெற்றுள்ளார்.

Similar News