செய்திகள்

சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் லெஜண்ட்ஸ் விருது பெறுகிறார் மேரி கோம்

Published On 2016-11-25 14:47 GMT   |   Update On 2016-11-25 14:47 GMT
இந்தியாவின் பிரபல குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம் சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் லெஜன்ட்ஸ் விருதினைப் பெற இருக்கிறார்.
இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனையாக திகழ்ந்தவர் மேரி கோம். இவர் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். அத்துடன் ஐந்து முறை உலகச் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியவர்.

சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் 70-வது ஆண்டு விழாவில் அடுத்த மாதம் 20-ந்தேதி நடக்கிறது. அப்போது மேரி கோம் லெஜண்ட்ஸ் விருதினைப் பெறுகிறார்.



இதுகுறித்து மேரி கோம் கூறுகையில் ‘‘இந்த மதிப்புமிக்க விருது எனக்கு கிடைக்க காரணமாக இருந்த சர்வதேச குத்துச் சண்டை சங்கம் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு நான் கட்டாயம் நன்றி சொல்லியாக வேண்டும்.



ஏஐபிஏ-யில் கிடைத்திருக்கும் இந்த அங்கீகராம் இந்தியாவில் உள்ள இளம் குத்துச்சண்டை வீரர்களை கடின முயற்சி எடுக்க ஊக்குவிப்பதாக இருக்கும். இது எனக்கு மிகவும் உணர்ச்சி பூர்வமானதாகவும், உற்சாகமான நாளாகவும் அமைந்துள்ளது’’ என்றார்.

மேரி கோம் தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.

Similar News