செய்திகள்

தென்ஆப்பிரிக்கா அணியின் வரலாற்று நினைவில் தந்தை - மகனின் ஒற்றுமை

Published On 2016-11-24 21:08 IST   |   Update On 2016-11-24 21:08:00 IST
தென்ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர் ஸ்டீபன் குக் அவரது தந்தை ஜிம்மி குக் ஆகியோர் தொடக்க பந்தை சந்தித்து வரலாற்று நினைவில் ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான பகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. தென்ஆப்பிரிக்காவின் முதல் பகல் - இரவு சர்வதேச போட்டி இதுவாகும். டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அந்த அணியின் ஸ்டீபன் குக், எல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஸ்டீபன் குக் முதல் சந்தை எதிர்கொண்டார். இதன் மூலம் பிங்க் பந்தை சந்தித்த முதல் தென்ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை பெற்றார்.



இதற்கு முன் சுமார் 25 வருடங்களுக்கு முன் இவரது தந்தை ஜிம்மி குக் கொல்கத்தாவில் இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெள்ளை பந்தை எதிர்கொண்டார். இதன்மூலம் வெள்ளை பந்தை சந்தித்த முதல் தென்ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். இதன்மூலம் மாறுபட்ட நிற பந்தை சந்தித்த முதல் வீரர்கள் என்ற வரலாற்று பெருமையை தந்தை மகன் பெற்றுள்ளனர்.

இருவரும் விளையாடிய மாதம் நவம்பர் மாதம்தான். இதேபோல் ஜிம்மி குக் டெஸ்ட் போட்டியில் சிகப்பு பந்தை எதிர்கொண்டதும் நவம்பர் மாதம்தான்.

Similar News