செய்திகள்

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஜெரார்டு ஓய்வு

Published On 2016-11-24 18:00 IST   |   Update On 2016-11-24 18:00:00 IST
இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஜெரார்டு தொழில்முறை கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும், லிவர்பூல் கால்பந்து கிளப் அணிக்காகவும் விளையாடியவர் ஸ்டீவன் ஜெரார்டு. 36 வயதாகும் இவர் தொழில்முறை கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.



17 வருடங்களாக லிவர்பூல் அணிக்காக விளையாடிய அவர், அதில் 12 வருடங்கள் கேப்டனாக செயல்பட்டுள்ளார். 2005-ம் ஆண்டின் சாம்பியன்ஸ் லீக் உள்பட 7 முக்கிய சாம்பியன் கோப்பைகளை அந்த அணிக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். கடைசியாக அவர் எல்.ஏ. கேலக்சி அணிக்காக விளையாடினார்.



இங்கிலாந்து அணிக்காக 114 போட்டிகளில் பங்கேற்று 21 கோல்கள் அடித்துள்ளார். 2010 உலகக்கோப்பை, யூரோ 2012 மற்றும் 2014 உலகக்கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக பங்காற்றியுள்ளார்.

Similar News