செய்திகள்

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று: பிரேசில் அணிக்கு முதலிடம்

Published On 2016-11-17 03:58 GMT   |   Update On 2016-11-17 03:58 GMT
2018-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று போட்டியில் பிரேசில் 27 புள்ளிகளுடன் (12 ஆட்டம்) முதலிடத்தில் நீடிக்கிறது.
2018-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில் 10 அணிகள் இறங்கியுள்ளன. நேற்று முன்தினம் சொந்த மண்ணில் நடந்த ஒரு ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை தோற்கடித்தது.

அர்ஜென்டினா அணியில் லயோனல் மெஸ்சி, பிரட்டோ, டி மரியா ஆகியோர் கோல் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தியது. பிரேசில் 27 புள்ளிகளுடன் (12 ஆட்டம்) முதலிடத்தில் நீடிக்கிறது.

அடுத்த 4 இடங்களில் முறையே உருகுவே (23 புள்ளி), ஈகுவடார் (20 புள்ளி), சிலி (20 புள்ளி), அர்ஜென்டினா (19 புள்ளி) ஆகிய அணிகள் உள்ளன. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை தகுதி சுற்று நடக்கிறது.

Similar News