செய்திகள்

விஜேந்தர் சிங் - பிரான்சிஸ் செகா மோதும் குத்துச்சண்டை டிசம்பர் 17-ந் தேதி நடக்கிறது

Published On 2016-11-15 08:39 IST   |   Update On 2016-11-15 08:39:00 IST
விஜேந்தர் சிங் - பிரான்சிஸ் செகா மோதும் குத்துச்சண்டை போட்டி டெல்லியில் டிசம்பர் 17-ந் தேதி நடக்கிறது.
தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் களம் கண்ட இந்திய வீரர் விஜேந்தர்சிங் தனது 7 பந்தயங்களிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்தார்.

அவர் கடந்த ஜூலை மாதம் நடந்த உலக குத்துச்சண்டை அமைப்பின் ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெயிட் பிரிவில் ஆஸ்திரேலிய வீரர் கெர்ரி ஹோப்பை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

அந்த பட்டத்தை தக்க வைப்பதற்கான போட்டியில் விஜேந்தர் சிங் முன்னாள் உலக சாம்பியனும், கண்டங்களுக்கு இடையிலான போட்டி சாம்பியனுமான பிரான்சிஸ் செகாவை (தான்சானியா) எதிர்கொள்கிறார்.

இந்த போட்டி டெல்லியில் டிசம்பர் 17-ந் தேதி நடக்கிறது. 34 வயதான பிரான்சிஸ் செகா 43 போட்டியில் 32 வெற்றிகள் பெற்றுள்ளார். இதில் 17 நாக்-அவுட் வெற்றியும் அடங்கும். விஜேந்தர்சிங்கை ‘நாக்-அவுட்’ செய்வேன் என்று பிரான்சிஸ் செகா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Similar News