செய்திகள்

ஆசிய கோப்பையை வென்று தாயகம் திரும்பிய ஹாக்கி வீரர்களுக்கு தலைநகரில் உற்சாக வரவேற்பு

Published On 2016-11-01 01:27 IST   |   Update On 2016-11-01 01:27:00 IST
பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பையுடன் தாயகம் திரும்பியுள்ள ஹாக்கி வீரர்களுக்கு தலைநகர் டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுடெல்லி:

மலேசியாவில் ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி ஹாக்கி தொடர் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2வது  முறையாக ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி கோப்பையை கைப்பற்றியது.

இதனையடுத்து, பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி வீரர்கள் இன்று தாயகம் திரும்பினர். அவர்களுக்கு தலைநகர் டெல்லியில் உள்ள விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மூவர்ண கொடியிலான துண்டு மற்றும் மலர் மாலை அணிவித்து வீரர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.

Similar News