செய்திகள்

தாஷ்கண்ட் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் பயஸ் ஜோடி தோல்வி

Published On 2016-10-15 17:56 IST   |   Update On 2016-10-15 17:56:00 IST
உஸ்பெகிஸ்தானில் தாஷ்கண்ட் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் லியாண்டர் பயஸ் ஜோடி தோல்வியடைந்தது.
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் உள்ள ஒலிம்பிக் டென்னிஸ் ஸ்கூல் ஸ்டேடியத்தில் ‘தாஷ்கண்ட் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ்’ தொடர் நடைபெற்றது.

இதில் இந்தியாவின் லியாண்டர்ன பயஸ் - ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆந்த்ரே பெஜிமான் ஜோடி இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தானின் டெனிஷ் இஸ்டோமின்- ரஷியாவின் மிகைல் எல்கின் ஜோடியை எதிர்கொண்டது.

இதில் பயஸ் ஜோடி 4-6, 2-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவற விட்டது. வெற்றி பெற்ற டெனிஷ் இஸ்டோமின்- மிகைல் எல்கின் ஜோடிக்கு 125 ஏடிபி புள்ளிகளுடன் 7750 அமெரிக்க டாலரும், தோல்வியடைந்த பயஸ் ஜோடிக்கு 75 புள்ளிகளுடன் 4500 அமெரிக்க டாலர்களும் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த சீசனில் ஏடிபி உலகத் தொடரில் பயஸ் தோல்வியடையும் 3-வது இறுதிப் போட்டி இதுவாகும்.

Similar News