செய்திகள்

இலங்கை கிரிக்கெட் வீரர் தினேஷ் சண்டிமாலுக்கு வலது கை விரலில் ஆபரேசன்

Published On 2016-09-19 07:19 GMT   |   Update On 2016-09-19 07:19 GMT
இலங்கை அணியின் விக்கெட் கீப்பரும், துணை கேப்டனும் ஆன சண்டிமாலுக்கு வலது கை பெருவிரலில் ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் துணை கேப்டனாக இருப்பவர் தினேஷ் சண்டிமால். இவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடியபோது வலது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அணி அக்டோபர் மற்றும் நவம்பர் மாத்தில் ஜிம்பாப்வே அணிக்கெதிராகவும், டிசபம்பர் மாதம் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராகவும் விளையாடி இருக்கிறது. இதற்கு முன் சண்டிமாலுக்கு பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.

சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் மேத்யூஸ் காயம் அடைந்ததால், சண்டிமால் கேப்டனாக செயல்பட்டார். 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட சண்டிமால், 2014-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வரை கேப்டனாக இருந்தார். அதன்பின் சண்டிமால் தனது பேட்டிங்கில் முக்கியத்தும் செலுத்துவதற்காக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இலங்கை அணிக்காக 31 டெஸ்ட், 119 ஒருநாள் மற்றும் 45 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 3 ஒருநாள் மற்றும் 21 டி20 போட்டியில் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

Similar News