செய்திகள்

கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த பி.வி. சிந்து: சாக்சி மாலிக் இரண்டாமிடம்

Published On 2016-08-19 19:38 IST   |   Update On 2016-08-19 19:38:00 IST
ஒலிம்பிக் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இந்திய ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து கூகுள் தேடலில் முதலிடம் பிடித்துள்ளார்.
கவுகாத்தி:

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் போட்டி தொடர்பான செய்திகள், வீரர்களின் சாதனைகள், அவர்களின் சுய விவரம் குறித்த தேடலுக்கு கூகுள் முன்னிலை வகிக்கிறது.

இந்தியாவின் பதக்க கணக்கை சாக்சி மாலிக் தொடங்கிய நாளில் இருந்து இந்தியாவில் அதிகம் நபர் அவரது தகவலை கூகுளில் தேடியுள்ளனர். அதன்பின்னர் பி.வி. சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததால் கூகுள் தேடலில் அவர் முன்னிலை பெறத் தொடங்கினார்.

இந்நிலையில், கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மூன்று நாட்களில் கூகுளில் தேடப்பட்ட இந்திய வீரர்- வீராங்கனைகளில் பி.வி. சிந்து முதலிடத்தையும், சாக்சி மாலிக் இரண்டாம் இடத்தையும் பிடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களைத் தொடர்ந்து கிதாம்பி ஸ்ரீகாந்த், தீபா கர்மாகர், சானியா மிர்சா, சாய்னா நேவால், வினேஷ் போகத், லலிதா பாபர், விகாஸ் கிரிஷன் யாதவ், நர்சிங் யாதவ் ஆகியோர் உள்ளனர்.

கடந்த 7 நாட்களில் ஒலிம்பிக் தொடர்பான தேடலில் உலக ட்ரெண்டிங்கில் இந்தியா தற்போது 11-வது இடத்தில் உள்ளது. அதேபோல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட வெளிநாட்டு வீரர்களில் உசைன் போல்ட் முதலிடத்தில் உள்ளார்.

Similar News