செய்திகள்
ரியோ ஒலிம்பிக்: பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் சிந்து; வெள்ளி அல்லது தங்கத்தை உறுதி செய்தார்
பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து ஜப்பான் வீராங்கனையை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் வெள்ளி அல்லது தங்க பதக்கத்தை உறுதி செய்தார்.
ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து 6-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நோஜோமி ஒகுஹாராவுடன் மோதினார்.
முதல் செட்டில் பி.வி. சிந்து ஆக்ரோஷமாக விளையாடினார். இதனால் எந்தவொரு சூழ்நிலையிலும் ஜப்பான் வீராங்கனையை விட பின்தங்கவில்லை. 11-6 என முன்னிலை பெற்றிருந்தார். அதன்பின் ஜப்பான் வீராங்கனை சிந்துவிற்கு நெருக்கடி கொடுத்தார். ஒரு கட்டத்தில் 17-18 என ஒரு புள்ளி வித்தியாசத்தில்தான் ஜப்பான் வீருாங்கனை பின்தங்கியிருந்தார்.
பின்னர் சிந்து சிறப்பாக விளையாடி 21-19 என முதல் செட்டை கைப்பற்றினார்.
2-வது செட்டில் 3-0 என சிந்து முன்னிலை பெற்றிருந்தார். அதன்பின் தொடர்ச்சியான ஜப்பான் வீராங்கள் புள்ளிகள் பெற்று 4-3 என முன்னிலை பெற்றார். அதன்பின் இருவரும் ஒருவருக்கொருவர் ஈடுகொடுத்து விளையாடினார்கள். ஜப்பான் வீராங்கனையின் சிறப்பான ஆட்டத்தை முறியடித்து சந்திது 11-10 என முன்னிலையில் இருந்தார்.
அதன்பின் சிந்து அபாரமாக விளையாடினார். அதற்கு ஜப்பான் வீராங்கனையால் ஈடுகொடுக்க முடியவில்லை. சிந்து தொடர்ந்து 10 புள்ளிகள் பெற்றார். இதனால் 21-10 என 2-வது செட்டை எளிதில் கைப்பற்றி 2-0 என வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் பி.வி. சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஆகவே, சிந்து வெள்ளி அல்லது தங்க பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.