செய்திகள்

2168 வருட ஒலிம்பிக் சாதனையை முறியடித்த மைக்கேல் பெல்ப்ஸ்

Published On 2016-08-12 17:30 IST   |   Update On 2016-08-12 17:30:00 IST
2168 வருட ஒலிம்பிக் சாதனையை அமெரிக்காவின் நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் முறியடித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னணி நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ். ரியோவிற்கு முன் 18 தங்க பதக்கங்கள் வென்றிருந்த பெல்ப்ஸ், தற்போது ரியோவில் நான்கு பதக்கங்கள் வென்றுள்ளார். இதன் மூலம் 22 தங்கப் பதக்கம் வென்று அதிக தங்கம் வென்ற வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.

இதில் தனிப்பிரிவில் மட்டும் 13 தங்க பதக்கங்கள் வென்றுள்ளார். இதன்மூலம் தனி நபர் போட்டியில் 13 தங்கப் பதக்கம் வென்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அத்துடன் கிறிஸ்து பிறப்பதற்கு முன் கி.மு. 152-ல் லியோனிதாஸ் கிரேக் போட்டியில் படைத்த சாதனையை முறியடித்துள்ளார்.

லியோனிதாஸ் ஆஃப் ரோட்ஸ் கி.மு. 152, கி.மு. 154, கி.மு. 155, கி.மு. 156, கி.மு. 157 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பழங்கால ஒலிம்பிக்கில் பங்கேற்றார். இதில் மூன்று ஓட்டப் பந்தயங்களில் தலா நான்கு முறை தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

பெல்ப்ஸ் 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் 2004, 2008 மற்றும் 2012-ம் ஆண்டு வெற்றி பெற்றுள்ளார். 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் 2004, 2008 மற்றும் 2016-ம் ஆண்டில் பதக்கம் வென்றுள்ளார். 200 மீட்டர் மெட்லே பிரிவில் 2004, 2008, 2012 மற்றும் 2016-ல் பதக்கம் வென்றுள்ளார். 400 மீட்டர் மெட்லேயில் 2004 மற்றும் 2008-ல் பதக்கம் வென்றுள்ளார். 200 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் 2008-ம் ஆண்டு பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் 13 பதக்கங்கள் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

Similar News