செய்திகள்
ரியோ ஒலிம்பிக் கூடைப்பந்து: அமெரிக்க அணியின் ஆதிக்கம் தொடருகிறது
ரியோ ஒலிம்பிக் கூடைப்பந்து போட்டியில் அமெரிக்க அணியின் ஆதிக்கம் தொடருகிறது.
ரியோ ஒலிம்பிக் கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியனான அமெரிக்க அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் சீனா, வெனிசுலாவை எளிதில் தோற்கடித்தது.
இந்த நிலையில் 3-வது லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணி, ஆஸ்திரேலியாவை சந்தித்தது. இதில் ஆஸ்திரேலிய அணி எல்லா வகையிலும் அமெரிக்காவுக்கு கடும் சவால் அளித்தது. முதல் இரண்டு கால் பகுதி ஆட்டங்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 புள்ளிகள் முன்னிலை பெற்றது.
கடைசி இரண்டு கால் பகுதி ஆட்டங்களில் அபாரமாக செயல்பட்ட அமெரிக்க அணி 98-88 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரேலியாவை சாய்த்து தொடர்ந்து 3-வது வெற்றியை ருசித்தது. 2004-ம் ஆண்டு ஒலிம்பிக் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இருந்து அமெரிக்க அணி தொடர்ந்து பெற்ற 20-வது வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.