செய்திகள்
குத்துச்சண்டை: இந்திய வீரர் மனோஜ்குமார் 2-வது சுற்றுக்கு தகுதி
ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் மனோஜ்குமார் லாத்வியா வீரரை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டையில் இந்தியா சார்பில் விகாஸ் கிருஷ்ணன் யாதவ் (மிடில் வெயிட் பிரிவு) மனோஜ்குமார் (லைட் வெல்டர் பிரிவு), ஷிவதாபா (பாந்தம் வெயிட் பிரிவு) ஆகிய 3 பேர் பங்கேற்றனர்.
இந்திய வீரர் மனோஜ்குமார் பங்கேற்ற முதல் சுற்று இன்று அதிகாலை 3 மணிக்கு நடந்தது. லாத்வியா வீரர் பெட்ராசுகாவை எதிர் கொண்டார்.
இதில் மனோஜ்குமார் மிகவும் அபாரமாக செயல்பட்டு 2-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்த சுற்றில் அவர் உஸ்பெகிஸ்தான் வீரர் பசுலுதீன் கெய்பன் சோராவை சந்திக்கிறார். இந்தப் போட்டி வருகிற 14-ந்தேதி நடக்கிறது.
3-வது வீரரான ஷிவதாபா மோதும் முதல் சுற்று இன்று நடக்கிறது. அவர் கியூபா வீரர் ரெமிராசை சந்திக்கிறார். இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது.