செய்திகள்

ஒலிம்பிக்: பளுதூக்கும் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் 4-வது இடம்

Published On 2016-08-10 20:39 IST   |   Update On 2016-08-10 20:40:00 IST
ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம் இறுதிச்சுற்றில் 4-வது இடத்தைப் பிடித்தார்.
ரியோ:

தமிழகத்தின் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்ற அவர், இன்று நடைபெற்ற 77 கிலோ கிலோ எடைப்பிரிவினருக்கான குரூப்-பி இறுதிச்சுற்றில் களமிறங்கினார்.

இதில் ஸ்னாட்ச் பிரிவில் 148 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 181 கிலோவும் என மொத்தம் 329 கிலோ எடையைத் தூக்கினார் சதீஷ். இதன்மூலம், அவரால் 4-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

கொலம்பிய வீரர் ஆண்ட்ரஸ் மயுரிசியோ 346 கிலோ எடையை தூக்கி முதலிடத்தையும், ஸ்பெயின் வீரர் ஆண்ட்ரஸ் எட்வர்டோ 343 கிலோ தூக்கி 2-வது இடத்தையும், ஜெர்மனியின் முல்லர் நிகோ 332 கிலோ எடை தூக்கி 3-வது இடத்தையும் பிடித்தனர்.

Similar News