செய்திகள்

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் நஞ்சப்பா, ஜிது ராய் தோல்வி: தகுதிச்சுற்றில் வெளியேற்றம்

Published On 2016-08-10 19:48 IST   |   Update On 2016-08-10 19:48:00 IST
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் நஞ்சப்பா, ஜிதுராய் ஆகியோர் தகுதிச்சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினர்.
ரியோ:

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இன்று ஆண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில், இந்தியாவின் ஜிது ராய் 554 புள்ளிகளுடன் 12-வது இடத்தைப் பிடித்ததால் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற வில்லை. மற்றொரு இந்திய வீரர் பிரகாஷ் நஞ்சப்பாவும் தகுதிபெறவில்லை. அவர் 547 புள்ளிகளுடன் 25-வது இடத்திற்கு பின்தங்கினார்.

இந்த பிரிவில் தென்கொரிய வீரர் ஜின் ஜோங் ஓ 567 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தார்.

இந்தியா சார்பில் துப்பாக்கி சுடும் பிரிவில் 12 பேர் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றனர். பீஜிங் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா இந்த முறையும் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் விளிம்பில் வந்து பதக்கத்தை நழுவ விட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News