செய்திகள்

ஒற்றையர் பிரிவிலும் செரீனா வில்லியம்ஸ் வெளியேற்றம்

Published On 2016-08-10 17:30 IST   |   Update On 2016-08-10 17:31:00 IST
ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் ஒற்றையர் பிரிவிலும் செரீனா வில்லியம்ஸ் தோற்று போட்டியில் இருந்து வெளியேறினார். அவர் 3-வது சுற்றில் 4-6, 3-6 என்ற கணக்கில் உக்ரைன் வீராங்கனை சுவிட்டோலினாவிடம் வீழ்ந்தார்.
உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 22 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற இவர் ஏற்கனவே ரியோ ஒலிம்பிக்கில் இரட்டையர் பிரிவில் தோற்று இருந்தார்.

இந்த நிலையில் செரீனா ஒற்றையர் பிரிவிலும் தோற்று போட்டியில் இருந்து வெளியேறினார். அவர் 3-வது சுற்றில் 4-6, 3-6 என்ற கணக்கில் உக்ரைன் வீராங்கனை சுவிட்டோலினாவிடம் வீழ்ந்தார். செரீனா லண்டன் ஒலிம்பிக்கில் (2012) ஒற்றையர், இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற வீரராவார்.

முன்னணி வீரர்களில் ஒருவரான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-3 என்ற நேர்செட் கணக்கில் இத்தாலி வீரர் ஆண்டிரியாசை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Similar News