செய்திகள்
குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாஸ் வெற்றி: அமெரிக்க வீரரை வீழ்த்தினார்
ரியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் அமெரிக்க வீரர் கோன் வெல்லை வீழ்த்தி இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
ரியோ டி ஜெனீரோ:
ரியோ ஒலிம்பிக்கில் நேற்றைய 4-வது நாள் போட்டி இந்தியாவுக்கு ஏற்றம் நிறைந்ததாக இருந்தது. பதக்கத்தை இதுவரை வெல்ல முடியாவிட்டாலும் போட்டிகளில் வெற்றி பெற்றது.
குத்துச்சண்டை போட்டியில் ஹிவதாபா (பாந்தம்), மனோஜ்குமார் (லைட் வெல்டர் பிரிவு), விகாஸ் கிருஷ்ணன் யாதவ் (மிடில் வெல்டர்) ஆகிய 3 வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் விகாஸ் கிருஷ்ணன் மோதிய போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு 2.30 மணிக்கு நடந்தது. அவர் அமெரிக்க வீரர் கோன் வெல்லை சந்தித்தார். இதில் விகாஸ் கிருஷ்ணன் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 3 நடுவர்களும் விகாசுக்கு ஆதரவாக (29-28, 29-28, 29-28) முடிவு அறிவித்தனர்.
இந்த வெற்றி மூலம் அவர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த சுற்றில் விகாஸ் துருக்கி வீரர் ஒன்டர் ஹிபலை சந்திக்கிறார்.
2-வது இந்திய வீரர் மனோஜ்குமார் பங்கேற்கும் முதல் சுற்று இன்று நடக்கிறது. அவர் லாத்வியா வீரர் பெட்ராசுகாவை எதிர் கொள்கிறார். இந்திய நேரப்படி நள்ளிரவு 3 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது.
நேற்று நடந்த வில்வித்தை, ஆக்கி போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது. தனிநபர் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் அதானுதாஸ் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். ஆக்கி ஆண்கள் பிரிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.
துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து தோற்றார்.