செய்திகள்
பெண்கள் ஆக்கி இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி
பெண்கள் ஆக்கி போட்டியில் ‘பி’ பிரிவில் இந்தியா இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது.
ரியோடிஜெனீரோ :
பெண்கள் ஆக்கி போட்டியில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி, தனது 2-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. ஒருங்கிணைந்த ஆட்டத்தை அபாரமாக வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியின் தாக்குதல் ஆட்டத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா திணறியது.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆன்ஸ்லே 25-வது நிமிடத்திலும், ஒயிட் 27-வது நிமிடத்திலும், டான்சன் 33-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
இங்கிலாந்து அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்று இருந்தது. இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். முதலாவது லீக் ஆட்டத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானுடன் ‘டிரா’ கண்டு இருந்தது. இந்திய பெண்கள் அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் இன்று (புதன்கிழமை) ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.