செய்திகள்

பிரேசிலுக்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்த ஜூடோ வீராங்கனை

Published On 2016-08-10 03:29 GMT   |   Update On 2016-08-10 03:29 GMT
பிரேசிலுக்கு முதல் தங்கப்பதக்கத்தை ஜூடோ வீராங்கனை ரபெலா சில்வா வென்று கொடுத்தார்.
ரியோடிஜெனீரோ :

ரியோ ஒலிம்பிக் போட்டியின் 3-வது நாளில் போட்டியை நடத்தும் நாடான பிரேசில் முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. பெண்களுக்கான ஜூடோ போட்டியில் 57 கிலோ உடல் எடைப்பிரிவில் இறுதி சுற்றில் பிரேசிலை சேர்ந்த 24 வயதான ரபெலா சில்வா, உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சுமியா டோர்ஜ்சுரெனை (மங்கோலியா) வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

குடிசைப் பகுதியில் பிறந்தவரான ரபெலா சில்வா 2013-ம் ஆண்டு உலக போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேசில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றதை அந்த நாட்டு ரசிகர்கள் ஒன்று திரண்டு ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தங்கம் வென்ற பிறகு ரபெலா சில்வா கருத்து தெரிவிக்கையில், ‘ஜூடோ தான் எனது வாழ்க்கையாகும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு எனக்கு நல்ல ஊக்கம் அளித்தது. இந்த பதக்கம், பிரேசில் அணி இந்த வாரத்தில் மேலும் பல பதக்கங்களை வெல்ல திறவுகோலாக அமையும் என்று நம்புகிறேன்’ என்றார்.

Similar News