செய்திகள்
ஓரின சேர்க்கை ஜோடி இசடோரா செருல்லோ-மார்ஜோரி என்யா (வலது).

ரியோ களத்தில் திருமணம் செய்த ஓரின சேர்க்கை ஜோடி

Published On 2016-08-10 08:27 IST   |   Update On 2016-08-10 08:27:00 IST
ரியோ களத்தில் ஓரின சேர்க்கை ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.
ரியோ டி ஜெனீரோ :

ரியோ ஒலிம்பிக்கில் பிரேசில் பெண்கள் ரக்பி அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்பாகவே வெளியேறியது. அந்த அணியில் இடம் பெற்றிருந்த வீராங்கனைகளில் 25 வயதான இசடோரா செருல்லோவும் ஒருவர். இவர் ஓரினச்சேர்க்கை பிரியை. இவருக்கும், ஒலிம்பிக்கில் தன்னார்வ தொண்டு குழுவில் பணியாற்றும் மார்ஜோரி என்யா என்ற பெண்ணும் நீண்ட கால பழக்கம் உண்டு.

போட்டி முடிந்தும் திடீரென மார்ஜோரி, செருல்லோவிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்டார். அவரும் உடனடியாக சம்மதம் தெரிவித்தார். மோதிரம் இல்லாததால் ரிப்பனால் செருல்லோவின் விரலில் முடிச்சு போட்டு திருமணம் செய்து கொண்டார். ரியோ ஒலிம்பிக் களத்தில் நடந்த வித்தியாசமான இந்த திருமணத்தை புகைப்பட கலைஞர்கள் போட்டா போட்டியுடன் படம் எடுத்தனர்.

Similar News