செய்திகள்

ஒலிம்பிக்கில் தமிழக வீரர் தங்கம் வென்றால் ரூ.2 கோடி பரிசு

Published On 2016-08-10 07:51 IST   |   Update On 2016-08-10 07:51:00 IST
ஒலிம்பிக்கில் தமிழக வீரர் தங்கம் வென்றால் ரூ.2 கோடி பரிசு மாநில அரசால் வழங்கப்படும்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கொள்கை விளக்க குறிப்பில், “சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையினையும் தமிழக அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது. எனவே, ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு ரூ.2 கோடி மாநில அரசால் வழங்கப்படும்.

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கான தகுதியினைக் கொண்ட தடகளம், மேசைப்பந்து, நீச்சல், வாள் சண்டை மற்றும் பாய்மரப் படகோட்டுதல் ஆகிய விளையாட்டுகளைச் சேர்ந்த தலை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு தங்களுடைய திறமையை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் தலா ரூ.25 லட்சம் வீதம் 5 ஆண்டுகளுக்கு வழங்கி இத்திறனாளர்களை ஊக்குவித்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கச் செய்யும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு நிறுவியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News