செய்திகள்
இந்தியன் கிராண்ட் பிரீக்ஸ் தடகளம்: 100 மீட்டர் ஓட்டத்தில் டுடீ சந்த் தங்கம் வென்றார்
இந்தியன் கிராண்ட் பிரீக்ஸ் தடகள போட்டி பாட்டியாலாவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் டுடீ சந்த் தங்கம் வென்றார்.
இந்தியன் கிராண்ட் பிரீக்ஸ் தடகள போட்டி பாட்டியாலாவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் டுடீ சந்த் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 11.37 வினாடியில் கடந்தார்.
ஆனால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வேண்டிய நேரமாக 11.32 வினாடியை அவர் தொடவில்லை. கடந்த மாதம் டெல்லியில் நடந்த தேசிய பெடரேசன் கோப்பை தடகளத்தில் 11.33 வினாடியில் கடந்து தேசிய சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.