- சுய ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்றால் சகல விதத்திலும் பட்டையை கிளப்புவார்கள்.
- குடும்பத்தில் சிறு குழப்பம் நிறைந்து இருக்கும்.
திருவோணம் நட்சத்திரம் மகர ராசியில் அமைந்துள்ளது. இதன் அதிபதி சந்திரன். மகர ராசியின் அதிபதி சனிபகவான். இந்த நட்சத்திரத்திற்கு சமஸ்கிருதத்தில் ஸ்ரவண நட்சத்திரம் என்று பெயர்.
அதாவது கவனித்தல் அல்லது கேட்டல் என்று பெயர். வானில் பார்க்கும் போது மூன்று பாதச் சுவடுகளைப் போலவும் அல்லது முழம் அளக்கும் கோல் போலவும் காட்சியளிக்கும். இது பெருமாள் அவதரித்த நட்சத்திரம் என்பதால் திரு என்ற அடைமொழி இணைக்கப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரத்தின் வசிப்பிடம் ஆலயங்கள் ஆகும்.
ரோகிணி நட்சத்திரத்தின் பொது பலன்கள்.
இவர்கள் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதாலும் குளிர்ந்த தேகம் உள்ளவர்களாக இருப்பார்கள். சந்திரன் தாய்மை உணர்வு நிறைந்த கிரகம் என்பதால் இளகிய மனம் படைத்தவர்களாகவும் இருப்பார்கள். சந்திரன் வளர்ந்து தேயும் கிரகம் என்பதால் வாழ்க்கை ஏற்றம் இறக்கம் நிறைந்ததாகவும், மன சஞ்சலம், எண்ணங்களின் ஓட்டம் மிகைப்படுத்துவதாகவும் இருக்கும்.
வெளித் தோற்றத்தில் சிரித்த முகத்துடனும் மனதிற்குள் நிறைந்த சோகத்துடனும் வாழ்வார்கள்.
பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி. அமைதியான குணம் உண்டு. இவர்களை யாராவது சீண்டினால் புலியாக மாறிவிடுவார்கள். சுய ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்றால் சகல விதத்திலும் பட்டையை கிளப்புவார்கள். சிறந்த கற்பனையாளர், சிந்தனை சக்தி மிகுந்தவர்கள். கவிதை, கதை, கட்டுரை, வசனம் எழுதுவதில் கை தேர்ந்தவர்கள். இயற்கை விரும்பிகள். சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு வாழ்வார்கள். சமுதாய அந்தஸ்து, கவுரவம் நிறைந்த உத்தியோகம், பதவி உண்டு. பிறரிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தங்களின் நல்லது, கெட்டதை தாங்களே சமாளித்துக் கொள்வார்கள். பிறரின் ஆலோசனை கேட்டால் கவுரவம் குறைந்து விடும் என்று நினைப்பார்கள். பலர் புகழ் பெற்ற இயக்கம் அல்லது கட்சியில் இணைந்து தனித் திறமையுடன் செயல்படுவார்கள். எதிலும் நேர்மையாக பணியாற்றி புகழ் பெறுவார்கள். மிகக் கடினமான வேலையையும் யாரின் உதவியும் இன்றி எளிதாக செய்து முடிப்பார்கள்.
பெரும்பாலும் இனிப்பான, குளிர்ச்சியான உணவு, உற்சாக பானம் அருந்துவதில் விருப்பம் அதிகம் உண்டு. அதிக அனுபவப் பாடம் கற்றவர்கள் என்பதால் எதிலும் நிதானமாக எச்சரிக்கையுடன் செயல்படுவார்கள். பிரகாசமான வாழ்க்கையைக் கொண்டவர்கள். தானும் சந்தோசமாக இருப்பதுடன் தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்சியாக வைத்துக் கொள்வார்கள். கிடைத்த சந்தர்ப்பத்தை பற்றிக் கொண்டு இலகுவாக வாழ்க்கையில் முன்னேறும் கில்லாடிகள். அனைவரையும் வசீகரிப்பார்கள்.
கல்வி
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காலை நேரத்தை விட மாலையில் ஆர்வமாக கல்வி கற்பார்கள். கற்ற கல்வியால் பயன் உண்டு. சுய ஜாதகத்தில் சந்திரனுக்கு லக்ன சுபர் அல்லது குருவின் சம்பந்தம் இருந்தால் சுப பலன்கள் நடக்கும். சுய ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்றால் உணவு சார்ந்த படிப்புகள் ஓட்டல் மேனேஜ்மென்ட், தோட்டக்கலை பால் பொருள்கள் மீன் வளம், நீர் வளம், கப்பல் படை தலைவர், சுங்க இலாகா, விளம்பரம் கவிஞர் இது தொடர்பான படிப்புகள் படிக்கலாம் சனி பலம் பெற்றவர்கள். எலக்ட்ரிக்கல் என்ஜினியர், ஆர்க்யாலஜி, வரலாறு, புவியியல் சார்ந்த கல்விகள் அனைத்தும் மெக்கானிக் சார்ந்த கல்விகள், பிட்டர், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., மூலிகை செடி, நிலக்கரி, பாரம்பரியத்தைப் பற்றி படிப்பது, பாதுகாப்பு சார்ந்த படிப்புகள், எரிபொருள் சார்ந்த படிப்புகள் படிக்கலாம்.
தொழில்
தாங்கள் எந்த தொழில் செய்தாலும் அதில் தங்களுக்கென்று தனி முத்திரை பதிப்பார்கள். பொன், வெள்ளி மற்றும் ரத்தின வியாபாரம், அழகு பொருட்கள், கலைப் பொருட்கள், சொகுசுப் பொருட்கள், வாசனை திரவியங்கள், மற்றும் ஆடம்பரப் பொருட்கள் விற்பனை செய்தல், வட்டி தொழில், தரகு தொழில், வங்கிப் பணி, நிதி நிறுவனங்களில் பணி செய்தல், நிதித்துறை, நீதித்துறை, தங்கும் விடுதி, கேளிக்கை விடுதி, மற்றும் அழகு நிலையங்கள் நடத்துதல் இயல், இசை, நாடகம், நடிப்பு, பாட்டு மற்றும் கலைத் தொழில்கள் பயன்தரும்.
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்.
வாக்கு சாதுர்யம், புகழ், அந்தஸ்து உண்டு. இளம் வயதில் திருமணம் நடக்கும். தம்பதிகள் மிக மகிழ்ச்சியுடன் சந்தோசமாக ஓர் உயிர் ஈருடலாக வாழ்வார்கள். இல்லற இன்பத்தில் ஆர்வம் மிகுதியாக இருக்கும். எளிய நிலையில் இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு முன்னேற்றமான வாழ்க்கை உண்டு. வாழ்க்கைத் துணை வசதியானவராக இருப்பார். அல்லது நல்ல உத்தியோகத்தில் உள்ள வரன் அமையும். குடும்பம் கோவிலாக இருக்கும். சிவம் இல்லையேல் சக்தி இல்லை. இவர்கள் சுயமாக செயல்படுவதில்லை. பிறரைச் சார்ந்தே வாழ்வார்கள். ஆனால் வெளியில் குடும்பத்தில் ஏதாவது ஒரு உறுப்பினரின் கட்டுப்பாட்டில் தான் வாழ்வார்கள். அவர்களைத் தவிர பிறரின் ஆலோசனைக்கு செவி சாய்க்க மாட்டார்கள்.
பொருளாதாரத்திலும், குடும்ப வாழ்க்கையிலும் மனநிறைவு, தன்னிறைவு உண்டு.
ஐ.ஆனந்தி
தசா பலன்கள்
சந்திர தசா
திருவோணம் நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன் என்பதால் இவர்களுக்கு பிறந்த காலத்தின் நேரத்திற்கு ஏற்ப சந்திர தசா நடக்கும். இதன் தசா வருடம் 10 ஆண்டுகள். இது ஜென்ம தாரையின் தசா என்பதால் இடப் பெயர்ச்சி நடக்கும்.
உடல் ரீதியான சிறு சிறு தொந்தரவுகள் இருக்கும். தாய்க்கு மன சஞ்சலம், மன அழுத்தம் இருக்கும். தந்தைக்கு சொந்த வாழ்க்கையை விட பொது வாழ்க்கையில் தான் அதிகப்படியான ஆர்வம், அக்கறை இருக்கும்.
குடும்பத்தில் சிறு குழப்பம் நிறைந்து இருக்கும்.
செவ்வாய் தசா
இது இரண்டாவதாக வரக்கூடிய தன தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 7 ஆண்டுகள். பள்ளிப் பருவம் என்பதால் மாணவருக்கு கல்வி ஆர்வம் மிகுதியாக இருக்கும். வளரும் பயிர் முளையிலே தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப தனித் திறமையுடன் விளங்குவார்கள்.
தந்தைக்கு கவுரவமான பதவி, அந்தஸ்து, ராஜயோக வாழ்க்கை உண்டு. பொன், பொருள், பூமி லாபங்கள், வாகன வசதி உண்டு.
உழைப்பால் உயர்ந்த அந்தஸ்தும், செல்வாக்கும் பெறுவார்கள். குடும்ப உறவுகளால் நிம்மதி நிலைத்து நிறைந்து நிற்கும்.
ராகு தசா
இது மூன்றாவதாக வரக்கூடிய விபத்து தாரையின் தசாவாகும். இதன் தசாவருடம் 18 ஆண்டுகள்.
காலையில் உற்சாகத்துடனும் மாலையில் கவலையுடனும் இருப்பார்கள். வண்டிச் சக்கரம் போல் ஏற்ற இறக்கம் நிறைந்த வாழ்க்கையே வாழ நேரும். வெளித்தோற்றத்திற்கு எல்லாம் தெரிந்தவர் போல் காணப்பட்டாலும் மனதளவில் எதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற அடிப்படை அறிவு இருக்காது.
சிலருக்கு தீய எண்ணம் மற்றும் கெட்ட பழக்க வழக்கங்கள் அதிகமாக இருக்கும். வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பான முன்னேற்றம் தருவதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் பலருக்கு அதிகப்படியான காதல் திருமணம் நடக்கும்.
குரு தசா
இது நான்காவதாக வரக்கூடிய சேம தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 16 ஆண்டுகள். கடின முயற்சிக்குப் பிறகு வெற்றி உண்டு.
வேகம் கலந்த விவேகத்துடன் செயல்படுவார்கள். செல்வாக்கு, சொல்வாக்கு உள்ள நபர்களாக இருப்பார்கள். தங்களது ஆலோசனைகளை பிறர் கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். மத்திம வயதில் வாழ்க்கையை இழந்தவர்கள் இந்த காலகட்டத்தில் வீடு, வாகனம், தோட்டம் என சகல வசதிகளுடன் வாழ்க்கையில் செட்டிலாகுவார்கள்.விதியை மதியால் வெல்லும் சூட்சமதாரிகளாக இருப்பார்கள். மதப் பற்றும், ஆன்மீக நாட்டமும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். தாயின் அன்பும், ஆதரவும் நிறைந்து இருக்கும்.
சனி தசா
இது ஐந்தாவதாக வரக் கூடிய பிரத்யக் தாரையின் தசாவாகும். இதன் தசா ஆண்டுகள் 19 வருடமாகும்.
அனைவரும் விரும்பும்படியான அமைதியான உள்ளம், மனம் உள்ளவர்களாக இருப்பார்கள். இனிய சொற்களால் எல்லோரையும் வசப்படுத்துவார்கள். இந்த காலகட்டத்தில் கல்வி நிறுவனம் நடத்துபவர்கள், ஆசிரியப் பணி, வங்கிப் பணிகளில் உள்ளவர்கள் பெரும்பான்மையான நன்மை அடைவார்கள். சிலருக்கு அதிர்ஷ்டம் குறைவுபடும். பொருளாதாரத்தில் தன்னிறைவு இருக்காது.
பிள்ளைகளால் மன சஞ்சலம் மிகுதியாக இருக்கும்.
புதன் தசா
இது ஆறாவதாக வரக் கூடிய சாதக தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 17. வயோதிகம் காரணமாக நல்ல வசதி வாய்ப்புகள் இருந்தாலும் எதையும் அனுபவிக்க முடியாத நோய் தாக்கம் மன சஞ்சலம் இருக்கும். எல்லாவிதமான உறவுகள் இருந்தாலும் உறவுகளால் பயனற்ற நிலை, உறவுகளைப் பிரிந்து வாழும் நிலை உடையவர்களானாலும் உலகமே வசப்பட வேண்டும் என்ற பிரமாண்ட ஆசை இருக்கும். குறுக்கு வழியில் முன்னேற ஆசைப்படுவார்கள்.
சிலருக்கு மிக வேகமான முன்னேற்றமும் எதிர்பாராத இறக்கமும் ஏற்படலாம்.
திருவோணம் நட்சத்திரத்தின் சிறப்பு அம்சங்கள்.
ஆயுதம் பயிலவும் ஆயுதப் பிரயோகம் செய்யவும் ஆலய கும்பாபிஷேகம் செய்வதற்கு ஆலய திருப்பணிகள், மதம் சார்ந்த சடங்கு சம்பிரதாயங்களில் ஈடுபட உகந்த நட்சத்திரமாகும். இதன் அதிபதி சந்திரன் நீர் கிரகம் என்பதால் நீர்நிலைகள் வெட்ட, குளம் வெட்ட, சமுத்திர யாத்திரை செய்ய, சிறப்பு. வேத சாஸ்திரங்கள் கற்றுக் கொள்ளலாம். புதிய விரதங்களை செய்ய தொடங்கலாம். யாகம்
ஹோமம், சாந்தி பரிகாரங்கள் ஹோம சாந்தி செய்யவும், மந்திரங்களை உச்சாடனம் செய்ய துவங்கலாம். கீர்த்த யாத்திரை செய்தல் புண்ணிய நதிகளில் நீராடல் போன்றவற்றுக்கு உகந்ததாகும் வேதம் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் திருவோணம் நட்சத்திரம் வரும் நாளில் மகா விஷ்ணுவை வழிபட சாஸ்திர புலமை ஏற்படும்.தொழில் விருத்தி வியாபார விருத்தி உண்டாகும்.
நட்சத்திர பட்சி: நாரை
யோகம்: சாத்யம்
நவரத்தினம் : முத்து
உடல் உறுப்பு: மர்ம உறுப்பு
திசை : வடக்கு
பஞ்சபூதம் : காற்று
அதிதேவதை: மகா விஷ்ணு
நட்சத்திர மிருகம்: பெண் குரங்கு
நட்சத்திர வடிவம்: வாள், முழக்கோள்
நன்மை தரும் நட்சத்திரங்கள்
சம்பத்து தாரை: அவிட்டம், மிருகசீரிஷம், சித்திரை
சேம தாரை : பூரட்டாதி, புனர்பூசம், விசாகம்
சாதக தாரை: ரேவதி, ஆயில்யம், கேட்டை
பரம மிக்ர தாரை : உத்திராடம் கிருத்திகை. உத்திரம். பொதுவான சில பரிகாரங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் விரதம் இருந்து வாமன அவதார காட்சியை வழிபட கவலைகள், கஷ்டங்கள் மறைந்து மன அமைதி கூடும். சாதக தாரையான ரேவதி 6-வது நட்சத்திர நாளில் கடலில் புனித நீராட வாழ்க்கை வளமாகும்.
கடல் மற்றும் நீர் நிலைகளில் உள்ள ஜீவ ராசிகளுக்கு உணவிட தாராள தன வரவு உண்டாகும்.