- பார்வதி தேவி சிவபெருமானிடம் கீழ்க்கண்ட கேள்விகளை கேட்கின்றார்.
- தியான வழிமுறைகள் அனைவருக்கும் பொதுவானதுதான்.
அநேகமாக எல்லோருடைய மனதிலும் ஒரு கேள்வி இருக்கும். இந்த உலகம் எப்படி இயங்குகின்றது. ஆரம்ப காலத்தில் இருந்து இதற்கு என பொறுப்பானவர்கள் யாரேனும் இருக்கின்றார்களா? இறப்புக்குப் பிறகு மனிதனுக்கு என்ன நேருகின்றது? இதற்கெல்லாம் எங்கு பதில் கிடைக்கும்? என மனித மனதின் ஓர் மூலையில் ஓடிக் கொண்டேதான் இருக்கும்.
இது இப்படி ஓடிக் கொண்டே இருக்க, ஆன்மீக ரகசியங்கள் என்றாலே சிவபெருமான் வழிபாட்டில் அதிக பேர் உருகி உருகி தேடியுள்ளனர். 'சிதம்பர ரகசியம்' என்ன என்பதை அறிய சிதம்பரம் நடராஜர் ஆலயம் சென்றால் ஒரு திரையினை விலக்கிக் காட்டுவர். தங்கத்தால் ஆன வில்வ மாலை தொங்கும். அவ்வளவே. தீபாராதனை காட்ட நாமும் கன்னத்தில் தட்டி, கைகளால் கற்பூரம் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு வந்து விடுவோம். திரையைத் தாண்டிய 'வெட்டவெளி' என்பதே இங்கு ரகசியம். இது ஆகாய தத்துவம் கொண்ட கோவில்.
இதனையும் தாண்டி சிவனைத் தேடி அலைபவர்கள், ஆன்மீக முன்னேற்றம் காண விரும்புபவர்களுக்கு ஒரு பொக்கிஷமாக அமைந்துள்ள நூல்தான் "விஞ்ஞான பைரவ தந்தரா" ஆகும.
மேற்கூறப்பட்டுள்ள அனைத்து சந்தேகங்களுக்கும் இந்த நூல் மூலம் விடை காண முடியும் என்கின்றனர்.
விஞ்ஞான பைரவ தந்தரா நூல் இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தையது என்கின்றனர்.
பார்வதி தேவி சிவபெருமானிடம் கீழ்க்கண்ட கேள்விகளை கேட்கின்றார். "ஈசனே நீங்கள் தான் சர்வம் என்கின்றனர், உண்மையில் நீங்கள் யார்? இந்த பிரபஞ்சத்தின் ரகசியம் என்ன? இதன் மைய இயக்கம் என்ன? என பல கேள்விகளை கேட்கின்றார்.
இதற்கு நேரடியான பதிலாக இல்லாமல் 112 தியான முறைகளின் மூலம் இதனை அறியும் முறையை கூறுகின்றார் சிவபெருமான். இதுவே "விஞ்ஞான பைரவ ரகசியம்" எனப்படுகின்றது. தன்னை அறிதல் பற்றிய விழிப்புணர்வு தூண்டிய நிலை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த தியான வழிமுறைகள் அனைவருக்கும் பொதுவானதுதான். இதில் ஜாதி, மதம், நாடு, மொழி என்று எந்த பேதமும் இல்லை. 'தந்திரம்' என்பதை வழிமுறைகள் என்று பொருள் கொண்டு பார்க்க வேண்டும். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சிவபெருமானால் கூறப்பட்ட வழிமுறைகள் என்றாலும் 9-10-ம் நூற்றாண்டில் குப்தா என்பவரால் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது என்கின்றனர்.
விஞ்ஞான பைரவ தந்திரம் என்பது காஷ்மீர் சைவத்தின் பிரிவான திரிக்கா நூல் ஆகும். ஜெயின், புத்த, தியான முறையில் இந்த முறையினை இன்றும் அதிகமாக பழக்கத்தில் கொண்டுள்ளனர். ஒஹோ அவர்களாலேயே இது அதிக பிரபலம் ஆனது. இன்று சில ஆன்மீக இடங்களில் இதற்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
இதன் முதல் பயிற்சியாக கூறப்படுவதே மூச்சு பயிற்சிதான். சாதாரண மாய் நாம் உள்ளிழுக்கும் மூச்சிற்கும், வெளி விடும் மூச்சிற்கும் இடையே ஒரு மைக்ரோ செகண்ட் இடைவெளி உள்ளது. அதே போல் வெளிவிடும் மூச்சிற்கும், உள்ளிழுக்கும் மூச்சிற்கும் இடையே ஒரு மைக்ரோ செகண்ட் இடைவெளி உள்ளது. இதனை எவருமே கவனிப்பது இல்லை. இது மிகுந்த சக்தி வாய்ந்தது. இதனை அறிவதுதான் முதல் பயிற்சி.
இதனை தானே சுய முயற்சியாய் செய்வது தவறு. ஆபத்தினை விளைவிக்கும். தகுந்த பயிற்சியாளர் தேவை. குரு இல்லாமல் சுயமாய் முயற்சித்த பலரும் சித்தம் கலங்கி பாதிப்பு பெற்றனர். எனவே குரு மூலமே மிக சாதாரண மூச்சு பயிற்சியினையும் தொடங்க வேண்டும்.
ஆகவேதான் இந்த பயிற்சி முறைகளை எழுதுவதனை தவிர்க்கின்றோம். இதில் 112 வழி முறைகள் கொடுக்கப்பட்டு உள்ளன. என்றாலும் இதில் தேர்ந்த குருவே அவரவர் நிலைக்கேற்ப பயிற்று விப்பார். பொதுவில் யோகா முறையில் மூச்சு பயிற்சிகளை முதலில் பயில்வது நல்லது.
'ரவா-சப்தம்', பைரவா- சப்தத்தை தாண்டியது-வெற்றிடம்.
இவையெல்லாம் கூட சுமார் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பல முறைகள், பிரிவுகள் உள்ளன என்பதனை அறிந்து கொள்வதும் ஒரு கொடுப்பினைதான்.
இதனை மேலும் அறிய தகுந்த குரு மார்களிடம் சென்று பயிற்சி பெற வேண்டும்
சில உண்மைகளை நாம் மனதில்
நன்கு பதிய வைக்க வேண்டும்
கமலி ஸ்ரீபால்
* நம்பிக்கை துரோகம் என்பது ஒருவரின் எதிரியிடம் இருந்து வராது. ஒருவர் மிகவும் நம்புபவர் இடம் இருந்தே ஏற்படும். எனவே கண்மூடித்தன மான நம்பிக்கையை உயர் சக்தி தவிர வேறு எங்கும் வைக்க வேண்டாம்.
* நாம் மிகுந்த அன்பு செலுத்துபவர்களும் ஒருநாள் இந்த உலகை விட்டு செல்லத்தான் போகின்றனர். அது முதலில் நாமா? அவர்களா? என்றுதான் தெரிவதில்லை.
* வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அவர்கள் மீது உரிய கவனம். அக்கறை செலுத்த வேண்டும். காலி சட்டியினை வைத்துக் கொண்டு காலம் தள்ள முடியாது.
* பிறருக்குத் தெரியாது 'எத்தனை கடுமையான வாழ்வினை நீங்கள் வாழ்ந்து வருகின்றீர்கள்' என்று.
* பிறர் நம் மீது மதிப்பு கொடுப்பது இருக்கட்டும். நாம் நம் மீது எவ்வளவு மதிப்பு வைத்திருக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
* இந்த நொடியின் நிகழ்வோடு நான் ஒன்றி இருக்கின்றேன்.
* நான் போற்றத் தக்கவனாக என்னை ஒழுக்கமாய் உருவாக்கி உள்ளேன்.
* நான் நன்றியுணர்வு கொண்டவன்.
* நான் அமைதியினையே தேர்ந்தெடுக்கின்றேன். இவை போதும் வாழ்வை இனிமையாக்க.
சிவன் கோவிலை தரிசிக்கும் பலன்கள்!
* திருக்கருக்குடி-குடும்ப கவலை நீங்க
* திருக்கருவேலி-குழந்தை பாக்கியம் பெற, வறுமை நீங்க
* திருவழுந்தூர்- முன் ஜென்ம பாவம் விலக
* திருச்சத்திமுற்றம்- மண வாழ்க்கை அமைய
* திருப்பராய்துறை- கர்வத்தால் கெட்டவர்கள் நலம் பெற
* திருநெடுங்களம- தீாா துயர் தீர
* திருவெறும்பூர்- அதிகார மோகத்தால் வீழ்ந்தவர்கள் தெளிவு பெற
* திருப்பைஞ்சீலி- எம பயம் விலக
* திருவையாறு- அக்னி தோஷம் விலக
* திருவைகாவூர்-வில்வ அர்ச்சனை செய்து பாவங்கள் விலக
* திருக்கஞ்சனூர்- திரு மண தோஷம் விலக
* திருமங்கலங்குடி- குழந்தை பாக்கியம் பெற
* திருமணஞ்சேரி-திருமண தோஷம் விலக
* திருமுல்லைவாயல்- சந்திர தோஷம் விலக
* திருவெண்காடு-ஊழ்வினை தோஷம் விலக
* திருநெல்வேலி- மகான்களுக்கு செய்த குற்றம் விலக
* திருக்குற்றாலம்- முக்தி வேண்ட
* திருவாலவாய்- நட்சத்திர தோஷம் விலக
* திருப்பரங்குன் றம்-வாழத் தெரியாது தவிப்பவர்கள் வழிபட
* திருவா டானை-தீராத பாவம் நீங்க
* திருமுருகநாத சுவாமி கோவில்-மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக
* திருப்பாதிரிபுலியூர்- தாயை விட்டு பிரிந்து இருக்கும் குழந்தை தோஷம் விலக
* திருவக்கரை- செய்வினை தோஷம் விலக
* திரு வேற்காடு-வாணிப பாவம் விலக
* திருமயிலாப்பூர்-மூன்று தலைமுறை தோஷம் விலக
* திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு)- காம தோஷம் விலக
* திருவாலங்காடு- வீண் வம்பு தோஷம் விலக வழிபடலாம்.