செய்திகள்

ஸ்மார்ட் ஜாக்கெட் அணிந்து ஸ்மார்ட்போன் இயக்கலாம்: கூகுள் ஜாக்வார்டு அதிரடி

Published On 2017-03-14 17:52 IST   |   Update On 2017-03-14 17:52:00 IST
ஸ்மார்ட்போனுடன் இணைந்து பல்வேறு சேவைகளை இயக்க வழி செய்யும் ஸ்மார்ட் ஜாக்கெட் விலை ரூ.23,152 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்தனை விலைக்கு இந்த ஜாக்கெட் வழங்கும் சேவைகள் எவை என்பதை பார்ப்போம்.
சான்பிரான்சிஸ்கோ:

தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் நமக்கு பல்வேறு பயன்களை வழங்குகின்றன. புதிய கண்டுபிடிப்புகள் நம்மை மனதளவில் கவர்ந்து வரும் நிலையில் நம் உடலோடு இணைந்து நமக்கு புதிய அனுபவத்தை வழங்க இருக்கின்றன. சில ஆண்டுகளாக கூகுள் ஆய்வறைகளில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் ஜாக்கெட் முழுமையான செயல் வடிவம் பெற்றுள்ளன.  

நம் உடலில் அணிந்து கொண்ட பின் சில அசைவுகளில் பல்வேறு பலன்களை இந்த ஜாக்கெட் வழங்குகிறது. பல்வேறு சென்சார் மற்றும் நுண்கருவிகள் பொருத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் ஜாக்கெட், நமது ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொண்டு வேலை செய்கிறது. 



ஸ்மார்ட்போனிற்கு வரும் அழைப்புகளை எடுத்தல், இசையை இயக்குதல் என பல்வேறு ஸ்மார்ட்போன் சேவைகளையும் ஸ்மார்ட் ஜாக்கெட்டில் சில அசைவுகளில் இயக்க முடியும். 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற கூகுள் டெவலப்பர் கான்பெரன்ஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட் ஜாக்கெட் கான்செப்ட் இன்று முழு வடிவம் பெற்று 350 டாலர்கள் அதாவது ரூ.23,152 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

கூகுள் மற்றும் லெவிஸ் இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஜாக்கெட் ஜாக்வார்டு என அழைக்கப்படுகிறது. இதனுடன் வழங்கப்படும் சிறிய யுஎஸ்பி சாதனத்தை ஜாக்கெட்டில் வைத்தால் ஸ்மார்ட் அம்சம் செயல்படுத்தப்படும். பின் யுஎஸ்பியை எடுத்து பின் துவைக்கலாம்.

Similar News