செய்திகள்

ஐபோன் போன்றே ஹெட்போன் ஜாக் இன்றி தயாராகும் பிக்சல் 2 ஸ்மார்ட்போன்

Published On 2017-03-09 16:00 IST   |   Update On 2017-03-09 16:00:00 IST
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களில் ஹெட்போன் ஜாக் நீக்கப்படலாம் என தற்சமயம் கசிந்துள்ள புதிய தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:

மோட்டோரோலா, ஆப்பிள் மற்றும் லீஇகோ போன்றே கூகுள் நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன்களில் இருந்து ஹெட்போன் ஜாக்களை நீக்கலாம் என புதிய தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூகுள் ஆவணத்தின் மூலம் புதிய கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியானதாக கூறப்படுகிறது. பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களில் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் நீக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டிருந்த ஆவணத்தின் இதர தகவல்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வழங்கப்படவில்லை. 

ரகசியமாக கசிந்த கூகுள் ஆவணத்தில் ஹெட்போன் ஜாக் நீக்கப்படுவது உறுதியானது என்றும் இதில் எவ்வித மாற்று கருத்தும் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளதாக இது குறித்து வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இது வரை வெளியாகியிருக்கும் தகவல்கள் அதிகாரப்பூர்வமற்றது என்பதால் பிக்சல் 2 ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் நீக்கப்படுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

முன்னதாக வெளியான தகவல்களில் கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களில் மேம்படுத்தப்பட்ட புதிய அம்சங்கள் அதிகளவில் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது. முக்கியமாக கேமரா, பிராசஸர் உள்ளிட்டவை முந்தைய மாடலில் வழங்கப்பட்டதை வித சிறப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. 

கூகுள் நிறுவனத்தின் நெக்சஸ் பிரான்டு ஸ்மார்ட்போன்களுக்கு மாற்றாக கூகுள் சார்பில் சொந்தமாக தயாரிக்கப்படும் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இவை பிரீமியம் ஸ்மார்ட்போன்களான ஆப்பிள் ஐபோன் மற்றும் சாம்சங் பிரீமியம் மாடல்களுக்கு போட்டியாக அமைந்தது.

Similar News