இந்தியா

இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ரூ.1.60 கோடி மோசடி

Published On 2022-09-21 11:02 IST   |   Update On 2022-09-21 11:02:00 IST
  • வாலிபர் அமெரிக்காவிலிருந்து வந்தவுடன் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறினார்.
  • வாலிபரை நம்பிய இளம்பெண் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பலமுறை அவரது வங்கி கணக்கிற்கு ரூ.1.60 கோடி வரை அனுப்பி வைத்தார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமண தகவல் மையத்தில் தனது சுய விவரங்களை பதிவிட்டு தனக்கு ஏற்ற ஜோடி வேண்டும் என பதிவிட்டு இருந்தார். இளம்பெண்ணின் விவரங்களை கண்ட வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர், நான் அமெரிக்காவில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்வதாக இளம்பெண்ணிடம் தெரிவித்தார். மேலும் அமெரிக்காவிலிருந்து வந்தவுடன் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறினார்.

இதனை உண்மை என நம்பிய இளம்பெண் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பலமுறை அவரது வங்கி கணக்கிற்கு ரூ.1.60 கோடி வரை அனுப்பி வைத்தார்.

இதையடுத்து கடந்த வாரம் இளம்பெண் வாலிபரின் செல்போனை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் எண் வேலை செய்யவில்லை.

இந்த நிலையில் தான் ஏமாற்றப்பட்டது அறிந்த இளம்பெண் இதுகுறித்து விஜயவாடா சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வாலிபர் போலியான சுய விவரங்களை திருமண தகவல் மையம் பதிவிட்டு தனக்கு ஏற்ற துணையை தேடும் இளம் பெண்களை ஏமாற்றி வந்தது தெரிய வந்தது.

மோசடி வாலிபர் இதுவரை எத்தனை பெண்களிடம் எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News