இந்தியா

100 ஆண்டு காயங்களும், வலிகளும் இன்று குணமடைந்தன: பிரதமர் மோடி

Published On 2025-11-25 13:00 IST   |   Update On 2025-11-25 13:00:00 IST
  • நமது ராமர் பாகுபாடு காட்டுவதில்லை, நாமும் அதே மனப்பான்மையுடன் முன்னேறி வருகிறோம்.
  • பொய்யை இறுதியில் உண்மை வெல்லும் என்பதற்கு இந்த புனிதக் கொடி சான்றாக நிற்கும்.

அயோத்தி ராமர் கோவில் முழுமையாக கட்டி முடித்த நிலையில், கோவில் கோபுர உச்சியில் 30 அடி உயர் கொடிமரத்தில் புனித காவிக்கொடியை பிரதமர் மோடி ஏற்று வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

* 2047-ல் இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும்போது, நாம் ஒரு வளர்ந்த இந்தியாவை உறுதி செய்ய வேண்டும்

* நமது ராமர் பாகுபாடு காட்டுவதில்லை, நாமும் அதே மனப்பான்மையுடன் முன்னேறி வருகிறோம்

* இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் ராமர் கோயில் கட்டுமானத்தில் எந்த வகையிலும் உதவிய அனைத்து ராமர் பக்தர்களை நான் வாழ்த்துகிறேன்.

* பொய்யை இறுதியில் உண்மை வெல்லும் என்பதற்கு இந்த புனிதக் கொடி சான்றாக நிற்கும்

* அயோத்தி அதன் வரலாற்றில் மற்றொரு சகாப்த நிகழ்வைக் காண்கிறது. முழு நாடும், உலகமும் ராமரில் மூழ்கியுள்ளது.

* 100 ஆண்டுகளின் காயங்களும் வலிகளும் இன்று குணமடைகின்றன. 500 ஆண்டுகால உறுதிமொழி நிறைவேறி வருகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags:    

Similar News