இந்தியா

இந்திய உடை அணிந்து கணவருடன் வந்த பெண் - உள்ளே விட மறுத்த டெல்லி உணவகம் - வீடியோ வைரல்

Published On 2025-08-09 07:57 IST   |   Update On 2025-08-09 10:26:00 IST
  • அந்தப் பெண் சுடிதார் மற்றும் சால்வை அணிந்திருந்தார். அவரது கணவர் டி-சர்ட் மற்றும் பேன்ட் அணிந்திருந்தார்.
  • குறைந்த உடையில் வந்த பலரை உள்ளே அனுமதித்ததாக தம்பதியினர் குற்றம்சாட்டினர்.

டெல்லியில் உள்ள ஒரு உணவகத்தில் இந்திய பாணி உடை அணிந்து கணவருடன் சென்ற பெண் உள்ளே அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

டெல்லியின் பிதாம்புரா மெட்ரோ நிலையம் அருகே உள்ள ஒரு உணவகத்தில் இருந்து வீடியோவை நேரடியாக ஒளிபரப்பிய தம்பதியினர், ஹோட்டல் நிர்வாகம் தங்களை அவமதித்ததாகக் குற்றம் சாட்டினர்.

அந்தப் பெண் சுடிதார் மற்றும் சால்வை அணிந்திருந்தார். அவரது கணவர் டி-சர்ட் மற்றும் பேன்ட் அணிந்திருந்தார்.

அந்த உடை பொருத்தமற்றது என்றும், உள்ளே அனுமதிக்கப்படமாட்டாது என்றும் உணவக மேலாளர் தெரிவித்துள்ளார்.

அந்த நிறுவனம் இந்திய கலாச்சாரத்தையும் ஒரு இந்தியப் பெண்ணையும் அவமதித்ததாகவும், அதே நேரத்தில் குறைந்த உடையில் வந்த பலரை உள்ளே அனுமதித்ததாகவும் தம்பதியினர் குற்றம்சாட்டினர்.

சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி பலரும் தங்கள் கண்டனத்தை  பதிவு செய்தனர். இதன் பின்னர் ஓட்டல் முதலாளி மன்னிப்பு கேட்டுள்ளார். இதற்கிடையே இதுகுறித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News