இந்தியா
5.2 கிலோ எடையில் பிறந்த ஆண் குழந்தை.
ஆந்திராவில் 5.2 கிலோ எடையில் பிறந்த ஆண் குழந்தை
- சபானா கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக அனந்தபுரம் கிம்ஸ் சவேரா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
- சபானாவுக்கு டாக்டர் சில்பா சவுத்ரி தலைமையில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் தர்மபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷபானா. இவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன.
நிறைமாத கர்ப்பிணியான சபானா கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக அனந்தபுரம் கிம்ஸ் சவேரா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
சபானாவுக்கு டாக்டர் சில்பா சவுத்ரி தலைமையில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்தனர். இதில் 5.2 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்தது.
தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.