இந்தியா

ஓடும் காருக்குள் வைத்து தாய்-மகளை கற்பழித்த கும்பல்... உத்தரகாண்ட்டில் நடந்த கொடூரம்

Update: 2022-06-27 04:28 GMT
  • காரில் வந்த ஒரு கும்பல் லிப்ட் தருவதாகக் கூறி அந்த பெண் மற்றும் அவரது மகளை காரில் ஏற்றிச்சென்றுள்ளனர்.
  • மருத்துவ பரிசோதனை செய்ததில், அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

ரூர்கீ (உத்தரகாண்ட்):

உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கி நகரில், பெண் மற்றும் அவரது 6 வயது மகளை ஒரு கும்பல் காருக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவத்தன்று இரவு அந்தப் பெண் பிரன் காளியர் பகுதியில் இருந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது காரில் வந்த ஒரு கும்பல் லிப்ட் தருவதாகக் கூறி அந்த பெண் மற்றும் அவரது மகளை காரில் ஏற்றிச்சென்றுள்ளனர்.

பின்னர் ஓடும் காருக்குள் வைத்தே தாய் மற்றும் மகளை அந்த கும்பல் பலாத்காரம் செய்துவிட்டு, ஒரு ஏரியின் அருகே விட்டுச் சென்றுவிட்டது. பின்னர் அந்தப் பெண் நள்ளிரவில் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். சோனு மற்றும் அவரது நண்பர்கள் காருக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் மனுவில் கூறி உள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட இருவரும் ரூர்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News