இந்தியா

ராகுல் நர்வேகர்

அஜித் பவார் உள்ளிட்ட 9 பேர் தகுதி நீக்க மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: சபாநாயகர்

Published On 2023-07-03 12:08 IST   |   Update On 2023-07-03 14:46:00 IST
  • அஜித் பவார் உடன் 9 பேர் நேற்று மந்திரியாக பதவி ஏற்றனர்
  • தேசியவாத காங்கிரஸ் ஜிதேந்திர அவாத்தை எதிர்க்கட்சி தலைவராக நியமித்துள்ளது

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவார் மற்றும் 8 எம்.எல்.ஏ.க்கள் நேற்று மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டனர். துணை முதல்வராக பதவி ஏற்ற அஜித் பவார், 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்து இனிமேல் நாங்கள்தான் தேசியவாத காங்கிரஸ் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சரத் பவார் ஆதரவாளர் ஜெயந்த் பாட்டீல், சபாநாயகருக்கு ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் அஜித் பவார் உள்ளிட்ட 9 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து மகாராஷ்டிர மாநில சபாநாயகர் கூறுகையில் ''9 தேசியவாத எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற ஜெயந்த் பாட்டீல் மனுவை பெற்றுக் கொண்டேன். அதை கவனமாக படிப்பேன். அவர் குறிப்பிட்டுள்ள விவரங்களை ஆய்வு செய்து, அதற்குரிய நடவடிக்கையை எடுப்பேன்'' என்றார்.

அஜித் பவாருக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக உள்ளனர் என்ற கேள்விக்கு, ''அதுபற்றி தகவல் என்னிடம் இல்லை என்ற அவர், புதிய எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வது சபாநாயகரின் தனியுரிமை என்றார்.

நேற்று தேசியவாத காங்கிரஸ் ஜிதேந்திர அவாத்தை எதிர்க்கட்சி தலைவராக நியமித்துள்ளது.

Tags:    

Similar News