முறைகேடு கண்டறியப்பட்டால்.., பீகார் SIR விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை..!
- பீகார் SIR செயல்முறையின்போது 65 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதாக புகார்.
- ஆதார் கார்டை 12ஆவது ஆவணமாக எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு.
பீகார் மாநிலத்தில் தேர்தல் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில் முறைகேடு நடந்ததாகவும், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இன்றைய விசாரணையின்போது உச்சநீதிமன்றம், பீகார் SIR நடைமுறையில் ஏதாவது முறைகேடு கண்டறியப்பட்டால், உடனடியாக பீகார் SIR நடைமுறை முழுமையாக ரத்து செய்யப்படும். அக்டோபர் 7ஆம் தேதி இறுதி விவாதம் நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தற்காலிகமாக இடைக்கால நிவாரணம் ஏதும் அளிக்காமல், இறுதி தீர்ப்பு ஒட்டுமொத்த இந்தியாவுக்குமானதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 8ஆம் தேதி ஆதார்டு கார்டையும் செல்லுபடியாகும் 12ஆவது ஆவணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.