இந்தியா

கூடலூரில் இருந்து கேரளாவுக்குள் நுழைந்த காட்டு யானை- மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி

Published On 2023-01-06 14:16 IST   |   Update On 2023-01-06 14:16:00 IST
  • கேரளா மாநிலம் வயநாடு அருகே சுல்தான்பத்தேரி பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
  • வனத்துறையினர் அப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

கேரளா மாநிலம் வயநாடு அருகே சுல்தான்பத்தேரி பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை இங்குள்ள தொழிலாளர்கள் வேலைக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த காட்டு யானை ஒன்று தம்பியை தாக்கியுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக தம்பி யானையிடம் இருந்து தப்பி சென்றார். எனினும் இவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருடன் சென்ற தொழிலாளர்கள் தம்பியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த யானை தமிழகத்தின் கூடலூர் வழியாக கேரளா நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News